துருக்கியில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; தெருவுக்கு ஓடிய மக்கள்

நிலநடுக்கம், இஸ்தான்புல் நகரின் தென்மேற்கே மர்மரா கடலில் மையம் கொண்டிருந்தது.
துருக்கியில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; தெருவுக்கு ஓடிய மக்கள்
Published on

இஸ்தான்புல்,

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் எதிரொலியாக, வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளில் இருந்தும், கட்டிடங்களில் இருந்தும் தப்பியோடி, தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இஸ்தான்புல் நகரின் தென்மேற்கே மர்மரா கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கி நாட்டின் வடமேற்கே குதஹியா மாகாணத்தின் சிமவ் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து 4.0 அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் உணரப்பட்டது. எனினும் இதனால் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com