ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ஆப்கனில் இன்று மாலை 6.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் 204 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com