நியூ கலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு

நியூ கலிடோனியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நவுமியா,

தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூ கலிடோனியா பகுதியில் உள்ள டாடினில் 7.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) அறிவுறுத்தி உள்ளது. மேலும் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அழிவுகரமான சுனாமி அச்சுறுத்தல் இல்லை. இது தகவல் தெரிவிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்சுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அந்த நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com