ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தனது டுவிட்டரில், "ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக 28-02-2023 அன்று ஏற்பட்டது, 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com