பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா..?

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிட்னி,

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 8:46 மணிக்கு 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக "சுனாமி அச்சுறுத்தல் இல்லை" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஒரு தனி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பூகம்பங்கள் அடிக்கடி ஏற்படுபவை. இது நில அதிர்வு "ரிங் ஆப் பயர்" மேல் அமர்ந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர டெக்டோனிக் செயல்பாட்டின் ஒரு வளைவு ஆகும்.

குறைந்த மக்கள்தொகை கொண்ட காடு மேடுகளில் அவை பரவலான சேதத்தை எப்போதாவது ஏற்படுத்தினாலும், அவை அழிவுகரமான நிலச்சரிவுகளைத் தூண்டுகிறது. கடந்த ஏப்ரலில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் உள்பகுதியில் காடுகளால் சூழப்பட்ட பகுதியில் தாக்கியதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com