நிலநடுக்கம், அரசியல் குழப்பம்: நேபாளத்தில் நீண்ட நாட்களுக்கு பின் முதியவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி

நேபாளத்தில் நீண்ட நாட்களுக்கு பின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம், அரசியல் குழப்பம்: நேபாளத்தில் நீண்ட நாட்களுக்கு பின் முதியவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி
Published on

காத்மண்டு,

நேபாள நாட்டில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றன. இதில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

எனினும், அந்நாட்டில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள், அரசியல் குழப்பம் ஆகியவற்றால் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தடைப்பட்டன. இதனால், முதியவர்களுக்கு போதிய அளவில் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லை.

முதல் டோஸ் எடுத்து கொண்டு விட்டு 2வது டோஸ் போடாத முதியவர்கள் அதிக ஆபத்து பிரிவில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஸ்நேகா சாக்யா என்பவர் கூறும்போது, எனது 100 வயது பாட்டிக்கு லலித்பூரில் உள்ள கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்காக உள்ளூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு அழைத்து சென்றேன்.

முதலில், அவர் தயக்கம் காட்டினார். தடுப்பூசி போட்டால் வலி ஏற்படும் என அச்சப்பட்டார். ஆனால், தடுப்பூசி போட்ட பின்னர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். ஏனெனில் அவர் தற்போது வீட்டுக்குள் எல்லா பகுதிக்கும் நடந்து செல்ல முடியும் என கூறியுள்ளார்.

நேபாளத்தில் 14 லட்சம் மூத்த குடிமக்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் 12 வாரங்களுக்கும் கூடுதலாக காத்திருந்து உள்ளனர். எனினும், அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை விடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com