ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

ரிகியவிக்,


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள சிக்லுப்ஜோரூர் நகரில் நேற்று முன்திம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜஸ்லாந்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com