வாரத்திற்கு நான்கு முறை மிளகாய் சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் 40 சதவீதம் குறைவு

வாரத்திற்கு நான்கு முறை மிளகாயை சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
வாரத்திற்கு நான்கு முறை மிளகாய் சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் 40 சதவீதம் குறைவு
Published on

ரோம்,

இத்தாலியை சேர்ந்த போஸிலியில் உள்ள இன்ஸ்டிடியூடோ நியூரோலாஜிகோ மெடிட்டரேனியோ நியூரோமெட் (ஐ.ஆர்.சி.சி.எஸ்) ஆராய்ச்சியாளர்கள் எட்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 23,000 பேரை கண்காணித்து, அவர்களின் உணவைப் பற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். ஒவ்வொரு வாரமும் நான்கு முறை மிளகாயை சாப்பிட்டு வந்தவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வு முடிவில் தெரியவந்து உள்ளது. அவர்கள் மாரடைப்பால் இறப்பதற்கான வாய்ப்பு 40 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் பத்திரிகையில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபடுத்தபட்டவர்களின் இதயங்களுக்கு சிவப்பு மிளகாய் பயனளித்ததைக் கண்டறிந்தனர். மிளகாய் இதயத்திற்கு உதவியதாக நிரூபிக்கவில்லை.

ஆய்வில் பங்கேற்பாளர்கள் அனைவரும் மத்தியதரைக் கடல் பகுதியான இத்தாலியின் மோலிஸ் பகுதியைச்சேர்ந்தவர்கள். இது உலகின் ஆரோக்கியமான உணவு பகுதியாக கருதப்படுகிறது. ஆய்வு காலங்களில் சராசரியாக எட்டு ஆண்டுகளில், 1,236 பேர் இறந்தனர். இறப்புகளில் மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இதய நோய்களும் இதே அளவுதான் பாதிப்பு உள்ளது.

சிவப்பு மிளகாய் வழக்கமான உணவு என 24 சதவீத மக்களால் கூறப்பட்டு உள்ளது. மூன்றில் ஒரு பகுதியினர் அவர்கள் ஒருபோதும் மிளகாய் சாப்பிடவில்லை என கூறினர். வாரத்தில் நான்கு முறை மிளகாய் சாப்பிட்டவர்கள் இறப்பு 23 சதவீதம் குறைவாக இருந்தது. வழக்கமான மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய நோயால் இறக்கும் ஆபத்து முறையே 40 மற்றும் 34 சதவீதம் குறைவாக இருந்தது.

சிவப்பு மிளகாய் உண்பவர்கள் பொதுவாக மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றுகிறார்கள், பழம் மற்றும் காய்கறிகளை பொதுவாக வறுத்து மீன் உணவுகளில் சிவப்பு மிளகாயை சேர்க்கலாம் அல்லது பாஸ்தாவில் சேர்க்கலாம்.

எழுத்தாளர் மரியலவுரா பொனாசியோ கூறும்போது, ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இறப்பு அபாயத்திலிருந்து பாதுகாப்பு என்பது மக்கள் பின்பற்றும் உணவு வகைகளிலேயே இருக்கிறது.

வேறுவிதமாகக் கூறினால், ஒருவர் ஆரோக்கியமான மத்தியதரைக் கடல் உணவைப் பின்பற்றலாம், வேறு ஒருவர் குறைவாக ஆரோக்கியமாக சாப்பிடலாம், ஆனால் அவர்கள் அனைவருக்கும் சிவப்பு மிளகாய் ஒரு பாதுகாப்பு என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com