வர்த்தக போர் எதிரொலி: அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

வர்த்தக போர் எதிரொலியாக, அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
வர்த்தக போர் எதிரொலி: அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு
Published on

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இது இருநாடுகளிலும் பொருளாதாரம் தவிர்த்து, வேறு சில பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக அமெரிக்க சுற்றுலாத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க சுற்றுலாத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டு வரை 5.7 சதவீதமாக இருந்த சீன சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்து இருக்கிறது. எனினும் இது தற்காலிகமானது தான். இந்தாண்டு இறுதிக்குள் சீன பயணிகளின் வருகை 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com