வெறுப்பு பிரசாரம் எதிரொலி: ஜாகீர் நாயக்கின் டி.வி. சேனலுக்கு ரூ.2¾ கோடி அபராதம்

வெறுப்பு பிரசாரம் எதிரொலியாக, ஜாகீர் நாயக்கின் டி.வி. சேனலுக்கு ரூ.2¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
வெறுப்பு பிரசாரம் எதிரொலி: ஜாகீர் நாயக்கின் டி.வி. சேனலுக்கு ரூ.2¾ கோடி அபராதம்
Published on

லண்டன்,

மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். சட்டவிரோத பண பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். மலேசியாவில் தஞ்சமடைந்து, நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.

ஜாகீர் நாயக், தான் நிறுவிய பீஸ் டி.வி. உருது, பீஸ் டி.வி. ஆகிய சேனல்கள் மூலம் மத பிரசாரம் செய்து வருகிறார். இங்கிலாந்திலும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சிகள், வெறுப்பு, அவதூறு பிரசாரமாகவும், குற்றச்செயல்களை தூண்டும்படியும் இருப்பதாக கூறி, இங்கிலாந்து ஊடக கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், பீஸ் டி.வி. நெட்வொர்க்குக்கு 3 லட்சம் பவுண்டு (ரூ.2 கோடியே 76 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com