ஒமைக்ரான் பரவல் எதிரொலி: ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பரவல் எதிரொலி: ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
Published on

கனடா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரசால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

இங்கிலாந்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 70 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி முழுமையாக செலுத்தி விட்டாலும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, சுவீடன், அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுக்கல், கிரீஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு மற்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பொது மக்கள் தங்கள் வெளி நாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எல்லை பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவீடன் நாட்டுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com