ஈகுவேடார்; சவ பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி உண்மையில் மரணம்

ஈகுவேடாரில் சவ பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி தீவிர சிகிச்சை பலனின்றி உண்மையில் மரணம் அடைந்து உள்ளார்.
ஈகுவேடார்; சவ பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி உண்மையில் மரணம்
Published on

சான்டோ டோமிங்கோ,

ஈகுவேடார் நாட்டில் வசித்து வந்தவர் பெல்லா மொன்டோயா (வயது 76). கடந்த 9-ந்தேதி அந்த மூதாட்டி உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி கடந்த வாரம் வெளிவந்த வீடியோ ஒன்றில், சவ பெட்டிக்குள் பெல்லா மூச்சிறைப்புடன் காணப்படுகிறார். அவருக்கு 2 ஆண்கள் உதவி செய்கின்ற காட்சிகள் வெளிவந்து உள்ளன.

பெல்லாவின் மகன் கில்பர்ட் பார்பெரா கூறும்போது, சவ பெட்டியின் உள்ளே இருந்து கொண்டு அவர் அதனை பலம் கொண்டு தட்டினார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை.

ஏனென்றால், அவருடைய உறவினர்கள் வருத்தத்தில் இருந்தனர் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், மூதாட்டி பெல்லா உயிரிழந்து விட்டார் என தவறுதலாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சவ பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெல்லா, பாபாஹோயோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின் அவர், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஸ்டிரோக் பாதிப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளி கிழமை அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி பார்பரா கூறும்போது, இந்த முறை அவரது தாயார் உண்மையில் உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார். இதனை மண்டல சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

பெல்லா உயிரிழந்து விட்டார் என முதன்முறை எப்படி தவறுதலாக அறிவிக்கப்பட்டது என்பது பற்றி சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com