

கெய்ரோ
எகிப்து நாட்டில் லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 31 பேர் பலியாகி உள்ளனர்.
எகிப்து நாட்டின் கிசா நகரில் அல்-வர்ராக் பகுதியில் உள்ள கெய்ரோ வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கத்தின் வலது புறத்தில் மோதியது.
அதனுடன் நிற்காமல், தொடர்ந்து கார் சென்றது. இதில், லாரியின் சக்கரங்கள் வெடித்தன. இதனால், அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த சுவரின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி கொண்டது. இதனால், அடுத்தடுத்து அந்த வழியே சென்ற வாகனங்கள் சிக்கி தீயில் எரிந்தன. கார்கள், மினி பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என 27 வாகனங்கள் அடுத்தடுத்து, எரிந்து சேதமடைந்தன. பல மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து, 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டி சென்றார் என கூறப்படுகிறது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.