எகிப்தில் ரயில்கள் மோதி விபத்து: 44 பேர் பலி, 180 பேர் காயம்

எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 44 பேர் பலியாகினர். 180 பேர் காயம் அடைந்தனர்.
எகிப்தில் ரயில்கள் மோதி விபத்து: 44 பேர் பலி, 180 பேர் காயம்
Published on

கெய்ரோ,

எகிப்து நாட்டின் கடற்கரை நகரமான அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. கெய்ரோவில் இருந்து வந்து கொண்டிருந்த ரயிலும் கோர்சித் பகுதியில் உள்ள போர்ட் செய்ட்டில் இருந்த வந்த மற்றொரு ரயிலும் நேருக்கு நேர் மோதி மோதியது. இந்த கோர விபத்தில் 44 பேர் பலியாகினர். 180 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு அதிபர் எல்-சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மாற்றி போடப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com