தீவிரவாத தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனங்களை தாக்கி அழித்தது எகிப்து ஜெட் விமானங்கள்

எகிப்தில் மசூதியில் 235 பேரை பலி கொண்ட தீவிரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை எகிப்து விமான படை ஜெட் விமானங்கள் தாக்கி அழித்தன.
தீவிரவாத தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனங்களை தாக்கி அழித்தது எகிப்து ஜெட் விமானங்கள்
Published on

கெய்ரோ,

இந்த கொடிய சம்பவத்தில் 235 பேர் பலியாகினர். 109 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஒன்றுமறியாத மற்றும் தற்காத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்கள் மீது நடந்த மிக கொடிய மற்றும் கோழைத்தனம் நிறைந்த தீவிரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எகிப்தின் விமான படையை சேர்ந்த ஜெட் விமானங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தன.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இலக்காக கொண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் அவர்கள் அழித்தனர் என ராணுவ வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com