நாளை ரமலான் பண்டிகை: தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது-சவுதி அரேபியா

ரமலான் பண்டிகையின்போது தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் அறிவித்துள்ளன
நாளை ரமலான் பண்டிகை: தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது-சவுதி அரேபியா
Published on

அபுதாபி:

ஈத் அல் பித்ரின் முதல் நாளாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.ஈத் அல் பித்ரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மே 24, ஞாயிற்றுக்கிழமை, ஷவ்வால் 1441 எச் முதல் நாளாக இருக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்திரன் பார்வைக் குழு அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர், பல மூத்த அதிகாரிகளுடன் நீதி அமைச்சரின் தலைமையில் குழு ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும், குழுவின் தலைவருமான சுல்தான் பின் சயீத் அல் பாடி அல் தஹேரி கூறுகையில், பிறை பார்க்கும் ஷரியா முறைகளை களைந்து, அண்டை நாடுகளுடன் தேவையான தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர், ஷவ்வால் மாத பிறை நிலவை வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை, எனவே நாளை, மே 23, சனிக்கிழமை, ரமலான் 1441 இன் கடைசி நாள் என்றும், மே 24, ஞாயிற்றுக்கிழமை, ஈத் அல் பித்ரின் முதல் நாள் என்றும் அறிவிக்கிறது என கூறினார்.

ஏற்கெனவே கெரேனா பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட மசூதிகள் தெடர்ந்து மூடப்பட்டிருக்கும், ஆதலால் வீடுகளிலேயே முஸ்லிம்கள் தெழுகை நடத்தி கெள்ள வேண்டுமென சவுதி அரேபியா அரசு கூறியுள்ளது.

அதேநேரத்தில் மெக்கா, மதினா புனித மசூதிகளில் இமாம்கள் மட்டும் தெழுகை நடத்துவார்கள் எனவும் அறிவித்துள்ளது. இதேபேல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசும், ரமலான் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com