ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்வு....!

ஈபிள் கோபுரம் மேலும் 20 அடி உயர்த்தப்பட்டுள்ளது
ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்வு....!
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889-ம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட ஈபிள் கோபுரம் உலக அளவில் புகழ்பெற்றதாகும். சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பிரபல சுற்றுலா தலமாகவும் இது விளங்குகிறது.

கடந்த 1929-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறைஸ்லர் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை ஈபிள் கோபுரம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்தது. இந்த கோபுரம் 986 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட நிலையில், வானொலி ஒலிபரப்புக்காக கோபுரத்தின் உச்சியில் ஏராளமான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து அதன் உயரம் 1,063 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் வானொலி ஆண்டெனா ஈபிள் கோபுரத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் இறக்கப்பட்ட இந்த புதிய ஆண்டெனாவை பணியாளர்களால் பத்தே நிமிடத்தில் பொருத்தப்பட்டது. இதன் மூலம் ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்ந்து 1,083 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com