சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி

நிலச்சரிவில் சிக்கி 34 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
Published on

பீஜிங்,

சீனாவின் சோங்கிங் மாகாணம் பெங்ஷி நகரில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் இருந்த மக்களும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தனர்.

8 பேர் பலி

இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி 34 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com