தேர்தல் நிதி வழங்கும் விவகாரம்: திடீரென மனம் மாறிய எலான் மஸ்க்


தேர்தல் நிதி வழங்கும் விவகாரம்: திடீரென மனம் மாறிய எலான் மஸ்க்
x

(File Photo | PTI)

தினத்தந்தி 21 May 2025 11:45 PM IST (Updated: 21 May 2025 11:45 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நிதி வழங்குவதை வரும் காலங்களில் பெருமளவில் குறைப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டோஹா,

கத்தாரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக தலைவர்கள், பெரும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். இந்த மாநாட்டில் உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம் (டுவிட்டர்), ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். இந்த உரையாடலில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக நீடிப்பேன், அதன்பிறகும் நான்தான் அந்த இடத்தை யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டேன். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்ந்து செயலாற்றுவேன்" என்றார்.

இதனைதொடர்ந்து, "தேர்தல் நிதி வழங்குவதை வரும் காலங்களில் பெருமளவில் குறைப்பேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக எலான் மஸ்க் ரூ.2,500 கோடிக்கும் மேல் செலவு செய்தார். இதனால் டெஸ்லா நிறுவன கார் விற்பனை சரிந்து லாபம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story