தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பாதுகாப்பானது - பில் கிளிண்டன்

தேர்தலில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பதே மிகவும் பாதுகாப்பானது என பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். #BillClinton
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பாதுகாப்பானது - பில் கிளிண்டன்
Published on

வாஷிங்டன்,

தொடுதிரை வாக்குகளில் முறைகேடுகள் அதிக அளவில் நடக்க சாத்தியமுள்ளதாகவும், வாக்குசீட்டு மூலம் வாக்களிப்பதே பாதுகாப்பானது என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. மேலும் இந்த வாக்களிப்பு இயந்திரத்தின் நவீன வடிவமான டச் ஸ்கிரின் எனப்படும் திரையை தொடுவதன் மூலம் வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இத்தகைய இயந்திரங்களில் தகவல்களை திருடுபவர்கள் சுலபமாக ஊடுருவ முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏராளமான சைபர் கிரைம் முறைகேடுகள் நடந்துள்ளது. அத்துடன் டச் ஸ்கிரின் வாக்களிப்பு இயந்திரத்தில் எளிதாக ஊடுருவ முடியும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த சந்தேகங்கள் தீரும் வரை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் முறை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இயந்திரங்களில் ஊடுருவுவது போல வாக்குச்சீட்டுகளில் ஊடுருவ முடியாது. இம்முறை மிகவும் பாதுகாப்பானது. சந்தேகத்துக்கு இதில் இடம் இருக்காது." என அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2016-ம் வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பலவித சைபர் கிரைம் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் இந்த இயந்திரங்களில் ரஷ்ய நாட்டின் மூலம் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com