

சீனா,
சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பார்க்கிங் பகுதியில், ஓட்டுநர் இல்லாத மின்சார கார் ஒன்று இரவு முழுவதும் 868 முறை தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற காட்சிகள் வைரலாகி உள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில், அதிகாலை 3 மணியளவில், ஓட்டுநர் இல்லாத மின்சாரக் கார் ஒன்று தரைதள வாகன நிறுத்துமிடத்தில் தானாகவே நிறுத்த முயன்றுகொண்டிருந்ததால், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் குழப்பமடைந்தார். சிசிடிவி காட்சிகளில், அந்த கார் முன்னும் பின்னுமாக நகர்ந்து, தனது நிலையைச சரிசெய்து, மீண்டும் மீண்டும் அதே நிறுத்தும் முயற்சியை செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வழக்கத்திற்கு மாறான சத்தங்களை் கேட்ட பாதுகாப்பு ஊழியர் காரின் அருகே சென்று பார்த்தபோது, உள்ளே யாரும் இல்லை. பின்னர் அதன் உரிமையாளர், காரின் கணினி பதிவின்படி, அதன் தானியங்கி நிறுத்தும் செயல்பாடு ஒரே இரவில் 868 முறை இயக்கப்பட்டதாக தெரிவித்தார். இறுதியாக, அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் அருகே நின்றது.
இந்த விசித்திரமான நிகழ்வுக்கு என்ன காரணம் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சில அறிக்கைகள் மென்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. மற்றவை, அந்த நேரத்தில் சீனாவில் நடைபெற்ற ஓட்டுநர் உதவிப் போட்டியில் புள்ளிகளைப் பெறுவதற்காக, உரிமையாளர் ஒரு செயலி மூலம் தொலைநிலை நிறுத்தும் அம்சத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறுகின்றன. காட்சிகளை மட்டும் வைத்து ஒரு கோளாறை உறுதிப்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
அந்த வீடியோவிற்குப் பதிலளிக்கும் விதமாக, பயனர்கள் பல வேடிக்கையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஒரு பயனர், "காருக்கு OCD வந்துவிட்டது, இனி மனிதர்கள் எங்கே போவார்கள்?" என்று எழுதினார்.
மற்றொரு பயனர், "ஒருவேளை அந்தக் கார் 'if and else' சுழற்சியில் சிக்கியிருக்கலாம்" என்று எழுதினார்.
மூன்றாவது பயனர், "எனது துப்புரவு ரோபோவும் இதேதான் செய்கிறது" என்று எழுதினார்.
நான்காவது பயனர், "கிராண்ட் தெப்ட் ஆட்டோ" என்ற வீடியோ விளையாட்டைக் குறிப்பிட்டு, "அந்தக் கார் GTA-வுக்குள் நுழைந்திருக்க வேண்டும்" என்று எழுதினார்.
மற்றொரு பயனர், "உண்மையாகச் சொல்கிறேன், உள்ளே இருப்பது என் முன்னாள் காதலிதான்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
மேலும் ஒரு பயனர், "நான் சொல்வதைக் கேளுங்கள், ஒருவேளை நமக்கு ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் தேவையில்லை போலும்" என்று எழுதினார்.
இப்படியாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் வீடியோ: