டிரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

மோடி - டிரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
டிரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்
Published on

மோடியுடன் பேசியது அது முதல் முறையாகும். இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களுடன், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்கும் பங்கேற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர்களுக்கு இடையேயான அழைப்பில் ஒரு தனி நபர் பங்கேற்றது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிரம்ப் அரசாங்கத்தில் வழங்கிய கவுரவபொறுப்புகளில் இருந்து எலான்மஸ்க் விலகி இருந்தார்.

இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்கள் உரையாடலுடன் அவரும் இணைந்திருப்பதாக வெளியான தகவல் முக்கியத்துவம் பெற்றது. இதற்கிடையே மோடி - டிரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை கூறியிருப்பதாவது: ‘‘இந்​தக் கதையை நாங்​கள் பார்த்​தோம். கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மற்​றும் அதிபர் ட்ரம்ப் இரு​வர் மட்​டும்​தான் தொலைபேசி​யில் பேசினர். அப்​போது வேறு யாரும் இடம்​பெற​வில்​லை’’ என்றார்​.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com