கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய என்விடியா நிறுவனருக்கு எலான் மஸ்க் ஆதரவு

ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி என்விடியா ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Published on: 

உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் ஜென்சன் ஹூவாங். சீனாவிற்காக உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக் கப்படும் சீனப் பெண் நிர்வாகி ஒருவருடன் தனக்கு இருந்த தனிப்பட்ட உறவை மறைத்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அமெ ரிக்கப் புலனாய்வு அமைப்புகளும், என்விடியா நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகின்றன. நிறுவனத்தின் இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி என்விடியா ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதற்கு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தனது ஆதரவைத் தெரிவித் துள்ளார். மேலும், என்விடியாவின் முக்கியப் பங்குதாரர்கள் பலரும் ஜென்சன் ஹூவாங் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

X