உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 வது இடம் பிடித்த எலான் மஸ்க்.. முதல் இடத்தில் யார்...?

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 வது இடம் பிடித்த எலான் மஸ்க்.. முதல் இடத்தில் யார்...?
Published on

வாஷிங்டன்,

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

இதனால் ஆமேசான் நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2022-ல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தன. டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அமேசான் நிறுவனர் பெசோஸ் 2021 ம் ஆண்டுக்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்து வந்த எலான் மஸ்க் தற்போது முதன்முறையாக உலகின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com