மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்


மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்
x
தினத்தந்தி 19 April 2025 3:48 PM IST (Updated: 19 April 2025 3:51 PM IST)
t-max-icont-min-icon

எலான் மஸ்க் இந்தியா வருகை தருவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

வாஷிங்டன்,

உலகின் பெரும் கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் வலைத்தளம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் நல்ல செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்கை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று எலான் மஸ்குடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், " பிரதமர் மோடியுடன் பேசியது பெருமை அளிப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story