முதலீட்டாளர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க்- வைரலாகும் டுவிட்டர் பதிவு

எலான் மஸ்க் இன்றைய டுவிட்டர் பதிவில் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

நியூயார்க்,

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார்.டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

அதே நேரத்தில் தான் இனி தனது நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பங்குகளை வாங்குவது தொடர்பாகவும் விற்பனை செய்வது தொடர்பாகவும் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

முதலீட்டாளர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், " என்னிடம் இது பற்றி அதிகமுறை கேட்கப்பட்டு விட்டன. அதனால் பதில் கூறுகின்றேன். உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பல நிறுவனங்களில் இருந்தும் பங்குகளை வாங்குங்கள்.

அதே நேரத்தில் அந்தந்த நிறுவனத்தின் நிலைமை மோசமடையும் போது அதன் பங்குகளை விற்று விடுங்கள். சந்தை இறங்கும் போது பதற்றம் அடையாதீர்கள். இது உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பலன் தரும் " என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com