விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு

அமெரிக்காவில் விமானத்தில் ஏறுவதற்கு மயிலுடன் வந்த பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. #UnitedAirlines #plane
விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்தவர் வெண்டிகோ இவர் செல்லபிரணானியாக மயிலை வளர்த்து வருகிறார். தான் எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வதும் வழக்கம். இந்த நிலையில் நியூஜெர்சியில் இருந்து லாஸ் ஏஞ்சலிஸ் செல்வதற்கு மயிலுடன் விமான நிலையம் வந்தார். அப்போது விமானத்தில் ஏற முயன்ற போது சோதனை செய்த யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மயிலுக்கு அனுமதி இல்லை என மறுத்து விட்டது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

மயிலுடன் செல்ல அனுமதி இல்லை என்ற தகவலை தாங்கள் ஏற்கனவே அவரிடம் தெரிவித்தோம். அவர் மயிலுடன் விமானம் நிலையம் வந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

இது குறித்து வெண்டிகோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தனக்கும் மயிலுக்கும் வென்ட்டிகோ பயணச்சீட்டு எடுத்திருந்த போதும், தான் 6 மணி நேரம் விமான நிலைய அதிகாரிகளுடன் போராடியும் அனுமதி அளிக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com