இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட தாய்லாந்து மன்னர் காதலியின் 1,400 நிர்வாண படங்கள்

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1,400 நிர்வாண படங்கள் இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட தாய்லாந்து மன்னர் காதலியின் 1,400 நிர்வாண படங்கள்
Published on

லண்டன்

சர்ச்சைக்கு பேர் போனவர் தாய்லாந்து மன்னரான மகா வஜிரலோங்க்கார்ன் (67). தாய்லாந்து வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக காதலி என்னும் பதவியை சினீநாட் வோங்வாஜிரபக்தி (35) என்னும் தனது பாதுகாவலரான பெண் ஒருவருக்கு மன்னர் கொடுத்தபோது, உலகமே அவரை ஒரு மாதிரியாக பார்த்தது.

ஆனால், அக்டோபர் மாதம் சினீநாட் திடீரென சிறையில் அடைக்க உத்தரவிட்டார் . ராணியான சுதிடாவின் (43) இடத்தை சினீநாட் கைப்பற்றமுயல்வதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.எதிரி ஒழிந்தார் என நிம்மதியாக சுதிடாவின் ஒரு பெருமூச்சு விடுவதற்குள், சினீநாட் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டு மன்னரின் அழகிப்படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில்தான் சினீநாட்டின் 1,000க்கும் மேலான நிர்வாண படங்கள் ஆண்ட்ரூ மேக்ரிகோர் மார்ஷல் என்னும் இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே தாய்லாந்து மன்னர் வஜிரலோங்க்கார்னை பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் ஆண்ட்ரூ , இந்நிலையில் அவருக்கு பெரும் உதவியாக இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், தாய்லாந்து கல்வியாளரான பாவின் சச்சவல்பொங்பன் என்பவருக்கும் அந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவரும் , மன்னரை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் ஜப்பானுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அந்த படங்கள் மன்னரை எதிர்க்கும் அவர்கள் இருவருக்கும் அனுப்பப்பட்டதால், இந்த விஷயத்தின் பின்னணியில் சுதிடாதான் இருப்பார் என கருதப்படுகிறது.

சிறைக்கு சென்ற சினீநாட், மீண்டும் மன்னருடன் இணைந்துவிட்டதால், அவரை பழிவாங்க இந்த படங்களை ராணி அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com