லைபீரியா அதிபர் சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு

விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
மான்ரோவியா,
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் அதிபர் ஜோசப் போகாய் அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்றிருந்தார். பயணத்தை முடித்துவிட்டு சிறிய ரக விமானம் மூலம் லைபீரியாவுக்கு புறப்பட்டார். அங்குள்ள ராபர்ட்ஸ் விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. எனவே விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவியது.
எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story






