இங்கிலாந்து: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளாக்வால்வே என்ற பகுதியில் 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

தீ விபத்து - ஒருவர் பலி

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 17வது தளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பை விட்டு கீழே இருங்கினர். மேலும், சிலர் தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் ஒருவர் (ஆண்) உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமத்தனர். மேலும், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com