இங்கிலாந்து: ஜி.யு.போப் கல்லறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

ஜி.யு.போப் தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து: ஜி.யு.போப் கல்லறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தியது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

ஜி.யு.போப்!

19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!

தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!

தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!

ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!

ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?

அங்குள்ள ஜி.யு.போப் அவர்களது கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com