சீனாவின் நியாயமற்ற நடைமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக முழு உலகமும் நிற்கிறது - அமெரிக்கா

சீனாவின் நியாயமற்ற நடைமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக முழு உலகமும் நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறினார்.
சீனாவின் நியாயமற்ற நடைமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக முழு உலகமும் நிற்கிறது - அமெரிக்கா
Published on

வாஷிங்டன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஒரு மாநாட்டில் உரையாற்றிய போது கூறியதாவது:-

தைவான் ஜலசந்தி முதல் இமயமலை வரை மற்றும் அதற்கு அப்பாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்தும் தெளிவான மற்றும் தீவிரமான முறையில் ஈடுபட்டுள்ளது. இது தென் சீனக் கடலிலும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா-சீனா எல்லையில் நிலைமையை அமைதியான முறையில் தீர்த்து கொள்வார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு சீனாவை பின்னுக்குத் தள்ள அமெரிக்காவுடன் இணைகிறார்கள். சீனாவின் நியாயமற்ற நடைமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக முழு உலகமும் நிற்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நியாயமான, பரஸ்பர மற்றும் வெளிப்படையான வழியில் போட்டியிட மறுக்கப் போகிறது என்ற மைய புரிதலைச் சுற்றி உலகம் முழுவதும் ஒன்றுபடத் தொடங்குவதை நாம் காண்கிறோம்.

அனைத்து மேற்கு நாடுகளும் ஒன்றிணைந்த அளவில் சீனா அதிக எண்ணிக்கையிலான ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது. நீங்கள் தீவிரமாக இருக்கப் போகிறீர்கள் என்றால், அணுசக்தி பரவல் ஒப்பந்தங்களின் கீழ் நாடுகள் எவ்வாறு கடமையை ஏற்றுக்கொள்கின்றன என்பதற்கு இசைவான வகையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com