சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பெருநிறுவனங்கள் தொடங்குவது குறித்த சட்ட வரைவு அறிக்கையில் புதிய மாறுதல்கள் செய்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என்ற வரைவுன் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிக்கையின் மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் அப்போது தான் கருத்துக்களை பொதுமக்கள் சரியாக கூறமுடியும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 30-ம் தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், நீதிமாற்ற உத்தரவுப்படி மத்திய அரசு மொழிபெயர்ப்பு செய்யவில்லை, அதற்கான காலஅவகாசமும் கேட்கவில்லை. இதனால், டோங்கட் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்பாக வருகின்ற 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுபட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com