எல்லையில் நிகழும் எந்த ஆபத்தையும் துருக்கி சந்திக்கும் - அதிபர் எர்டோகன்

தனது தெற்கு எல்லைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் துருக்கி அதிபர் எர்டோகன்.
எல்லையில் நிகழும் எந்த ஆபத்தையும் துருக்கி சந்திக்கும் - அதிபர் எர்டோகன்
Published on

இஸ்தான்புல்

ஐஎஸ் பிடியிலிருந்து ராக்கா நகரத்தை விடுவிக்க குர்திஷ் போராளிகுழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஆனால் இக்குழுவான ஒய்பிஜி ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகளால் பயங்கரவாத இயக்கமாக தடை விதிக்கப்பட்ட பிகேகே இயக்கத்தின் ஒரு பிரிவாகும் என்று துருக்கி குற்றஞ்சாட்டுகிறது, தனது தென் கிழக்கு எல்லையில் துருக்கி படைகளுடன் மோதி வரும் பிகேகேவுக்கு மறைமுகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன என்கிறார் எர்டோகன்.

கடந்த மே மாதம் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசியபோதும், ஜி-20 மாநாட்டில் சந்தித்தப்போதும் எர்டோகன் இதன் ஆபத்தை எடுத்துரைத்தார். ஆயுதம் வழங்குவதால் ஏற்படுகின்ற ஆபத்தை சந்திக்க தனது நாடு தயாராக இருப்பதாக அதிபர் எர்டோகன் தற்போது தெரிவித்துள்ளார்.

சிரியாவின் போராளி குழு ஒன்று தென்மேற்கு எல்லையில் துருக்கி ராணுவத்துடன் இணைந்து குர்திஷ் போராளிகளையும், ஐஎஸ் இயக்கத்தையும் ஒரு சேர எதிர்த்துப் போர் செய்கிறது. கடந்த ஆகஸ்டில் இப்படை எல்லையைக் கடந்து போரிட்டது, இப்புதிய கூட்டணியினால் ஏற்கனவே குழம்பியிருக்கும் சிரிய உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடையும். அமெரிக்காவும், ரஷ்யாவும், தென்மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.

இதன் எதிரொலியாகத்தான் அதிபர் எர்டோகன் இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com