

இஸ்தான்புல்,
மியான்மரில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு உதவிசெய்ய சர்வதேச சமுதாயம் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள துருக்கி அதிபர் எர்டோகன், உலகம் அவர்களுடைய அவலநிலையில் குரூடாகவும், செவுடாகவும் இருக்கிறது என விமர்சனம் செய்து உள்ளார். வங்காளதேசம் நோக்கி ரோஹிங்கா இஸ்லாமியர் வரும் நிலையை மிகவும் வலிநிறைந்த நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தொலைக்காட்சியில் பேசிய எர்டோகன் இவ்விவகாரத்தை அடுத்த மாதம் தொடங்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
சாத்தியமான முறையில் இச்சம்பவத்திற்கு நாங்கள் வலுவான கண்டத்தை தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
"ரோஹிங்கியா இஸ்லாமியர்களை துருக்கி கைவிடாது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு உதவ துருக்கி தயாராக இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திடமும் இதனை எதிர்பார்க்கிறேன் எனவும் கூறிஉள்ளார் எர்டோகன்.
ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்
மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.
பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் நடக்கும் சம்பவங்களை எதிர்க்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளாக அகதிகளாக இடமாறி வருகிறார்கள். பெரும்பாலும் வங்காளதேசம் மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவை நோக்கி வருகிறார்கள். அவர்கள் எல்லை மாநிலங்களில் அகதிகளாக வசித்து வருகிறார்கள். 1990-த்திற்கு பின்னர் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்து வருகிறது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்திருந்தாலும் ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரத்தில் எந்தஒரு மாற்றமும் கிடையாது.
ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு ராணுவம் பிரயோகிக்கும் வன்முறை தொடர்பான வீடியோக்கள் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது ரோஹிங்யா இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என கூறியதற்கு வங்காளதேசம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படை தாக்குதலை தொடங்கி உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மீண்டும் வங்காளதேச எல்லையை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளனர். இப்போதும் 20 ஆயிரம் பேர் வரையில் அகதிகளாக வங்காளதேசம் நோக்கி சென்று உள்ளனர்.