துனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் சாவு; 67 பேர் மாயம்

துனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.
துனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் சாவு; 67 பேர் மாயம்
Published on

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்று துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5-வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். இந்த விபத்துகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com