இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும்: வங்காளதேச முன்னாள் ராணுவ தலைவர் சொல்கிறார்

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வங்காளதேசம் இதை செய்ய வேண்டும் என வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும்: வங்காளதேச முன்னாள் ராணுவ தலைவர் சொல்கிறார்
Published on

டாக்கா,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

பஸ்லூர் ரஹ்மான் கூறுகையில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார். இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா -வங்காளதேசம் இடையேயான உறவில் சமீபகாலமாக கசப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், முன்னாள் ராணுவ தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com