வாழ்வா, சாவா நிலையில் வங்காளதேச முன்னாள் பிரதமர்; அதிர்ச்சி தகவல்

அரசியலில் இருந்து கலீதா ஜியாவை ஒழித்து விடும் நோக்குடன் பொய்யான வழக்குகளை போட்டு, அவரை சிறையில் அடைத்துள்ளனர் என ஆலம்கீர் கூறியுள்ளார்.
வாழ்வா, சாவா நிலையில் வங்காளதேச முன்னாள் பிரதமர்; அதிர்ச்சி தகவல்
Published on

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 79). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறார்.

அவருக்கு மூட்டு வலி, நீரிழிவு, நுரையீரல், இதயம் மற்றும் பல்வேறு உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சையை அளிக்க பிரதமர் ஷேக் ஹசீனா முன்வரவில்லை என்றும் உள்நோக்கத்துடனேயே, அவருக்கான நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க முடியாதபடி செய்கிறார் என்றும் தேசியவாத கட்சியின் பொது செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டாக்கா டிரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அரசியலில் இருந்து அவரை ஒழித்து விடும் நோக்குடன் பொய்யான வழக்குகளை போட்டு, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

அவரை வீட்டில் தங்க அனுமதி அளித்தபோதும், உண்மையில் அவர் சிறையிலேயே தொடர்ந்து அடைக்கப்பட்டு இருக்கிறார் என பக்ருல் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். ஷேக் ஹசீனா அரசு, பாசிச நோக்குடன் செயல்படும் அரசாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பழைய டாக்கா மத்திய சிறையில் இருந்தபோது, ஜியாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும் ஆனால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் ஆலம்கீர் கூறியுள்ளார்.

அவருடைய உடல்நிலை மனக்கலக்கம் அடைய செய்யும்படி உள்ளது. அவர் ரொம்ப நாளாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார். வாழ்வா, சாவா என்ற சூழலில் அவர் உள்ளார் என்று ஆலம்கீர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com