

லிஸ்பன்
இந்திய வம்சாவளிப் பெண்ணான சப்ரினா டி சௌசா என்பவர் அபு ஓசா எனும் எகிப்திய இஸ்லாமிய மதகுருவை கடத்திய வழக்கில் தண்டனை பெறவுள்ளார். 2003 ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலன் நகரில் இத்தாலி நாட்டின் உளவுத்துறையினரோடு இணைந்து அவர் அபுவை கடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் அவர் சிறைத்தண்டனை பெறவிருந்த நிலையில் அவருக்கு தண்டனையை குறைத்து அளித்திருப்பதாக இத்தாலி அதிபர் அறிவித்தார். அத்தண்டனையை அவர் சிறையில் கழிக்க வேண்டாம்; மாறாக சமூகச் சேவை செய்து கொள்ளலாம் என்றும் சலுகை வழங்கியுள்ளார். மூன்றாண்டுகள் வரை அவர் தண்டனை பெற வாய்ப்புண்டு.
எகிப்தில் அபு குற்றமற்றவர் என்றும் அவர் தீவிரவாத செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் கூறி விடுதலை செய்யப்பட்டார். ஆனால்; சப்ரினாவோ அபுவை கைது செய்யச் சொன்னது அமெரிக்க உயர்த் தலைமை என்றும் ஆனால் பிரச்சினையை சந்திப்பது தனனைப் போன்ற கள அளவில் செயலாற்றும் உளவுத்துறையினரே என்றும் வருத்தப்பட்டுள்ளார்.
தற்போது 60 வயதாகும் சப்ரினா இத்தாலி சென்ற பிறகு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்படுவார். அதன் பிறகு சமூக சேவையில் அவர் ஈடுபட வேண்டியிருக்கும் என்று சப்ரினா எதிர்பார்க்கிறார்.