கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் உடற்பயிற்சி நல்லது : ஆய்வு முடிவு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 90 நிமிடங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையில் உடற்பயிற்சி செய்து கொண்டால் அது நல்லது, உடலில் கூடுதல் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) உருவாகும்.
கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் உடற்பயிற்சி நல்லது : ஆய்வு முடிவு
Published on

அமெரிக்காவின் அயோவா மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மற்றும் டிரெட்மில்களில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.

இது குறித்த தகவல்கள் பிரெயின், பிஹேவியர், இம்யூனிட்டி என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய விஷயம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஒன்றரை மணி நேரத்துக்கு சைக்கிளை நிறுத்தி வைத்துக்கொண்டு பெடலைச்சுற்றி பயிற்சி செய்கிறபோது அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கு விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்கிறபோது அடுத்த 4 வாரங்களில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு பொருள் நிறைய உருவாகும் என்பதுதான்.

கொரோனாவுக்கு எதிரான பைசர் பயோ என்டெக் தடுப்பூசிகளையும், இன்புளூவன்சா காய்ச்சலுக்கு 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பின்னர் இப்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவதினால் உடலில் கூடுதலான நோய் எதிர்ப்பு பொருள் உருவாவது தெரிய வந்துள்ளது.

36 தனி தபர்களைக்கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே மேற்காள்ளப்பட்ட ஆய்வு, இந்த முடிவுகளை காணச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com