ஈரானில் குண்டு வெடிப்பு; பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.
ஈரானில் குண்டு வெடிப்பு; பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் பலி
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த போர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, போரின்போது ஈரான் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் சில வெடிக்காமல் உள்ளன. அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈரான் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானின் ஷான்சஜ் நகரில் நேற்று குண்டு வெடித்தது. ஈரான் புரட்சிகர காவல்ப்படை தளம் அருகே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர். போரில் ஈரான் மீது அமெரிக்கா வீசிய குண்டு தற்போது வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com