உக்ரைனில் ராணுவ சட்டம் நீட்டிப்பு - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

ராணுவ சட்டம் வரும் 25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் ராணுவ சட்டம் நீட்டிப்பு - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
Published on

கீவ்,

ரஷியா போர் தொடுத்துள்ள நாளில் இருந்து (பிப்ரவரி- 24) உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ராணுவ சட்டம் வரும் 25-ந் தேதி முடிய இருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ சட்டத்தை நீட்டிப்பதற்காக சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தாக்கல் செய்துள்ளார். அதில் என்ன கூறப்பட்டுள்ளது, எந்த நாள் வரையில் ராணுவ சட்டம் நீட்டிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com