‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் அரசியல் விளம்பர தடை நீட்டிப்பு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அரசியல் விளம்பர தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் அரசியல் விளம்பர தடை நீட்டிப்பு
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேஸ்புக் தனது வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்த விளம்பரங்களுக்கான தற்காலிக இடை நிறுத்தம், தேர்தலை பாதுகாப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த விளம்பரங்களை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும்கூட, இன்னும் ஒரு மாதம் தடை நீடிக்கும் என விளம்பரதாரர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பகிர்வு மற்றும் பிற முறைகேடுகளை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டு உள்ளது.

ஜார்ஜியாவில் ஜனவரி மாதம் செனட் சபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தடை வாக்காளர்களை சென்று அடைவதற்கான ஆர்வமுள்ள பிரசார நிர்வாகங்கள் மற்றும் குழுக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com