2 நாள் பயணமாக எகிப்து சென்றார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.
2 நாள் பயணமாக எகிப்து சென்றார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
Published on

கெய்ரோ,

இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "கெய்ரோவின், அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் இன்றைய நாள் தொடங்கி உள்ளது, இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும். " இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2019-ல் அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது.

ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com