புர்கினா பாசோவில் ராணுவம், பயங்கரவாதிகள் மோதல்; 47 பேர் கொன்று குவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, புர்கினா பாசோ. இ்ங்கு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு முதல், இவர்கள் நடத்திய தாக்குதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
புர்கினா பாசோவில் ராணுவம், பயங்கரவாதிகள் மோதல்; 47 பேர் கொன்று குவிப்பு
Published on

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரையில் வன்முறை காரணமாக 17 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்துச்சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் கடும் மோதல் வெடித்தது. இதன் முடிவில் 30 அப்பாவி மக்கள் உள்பட 47 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். 3 பேர் தன்னார்வலர்கள்.

இந்த மோதல் குறித்து ராணுவத்தரப்பில் கூறும்போது, பயங்கரவாதிகளுக்கு ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் 58 பேர் பலியானதாக தெரிவித்தனர். இந்த மோதல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com