ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கிற்கு தடை - பேஸ்புக் நிர்வாகம் அதிரடி

மியான்மர் நாட்டின் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை, தடை செய்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Myanmar #Facebook
ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கிற்கு தடை - பேஸ்புக் நிர்வாகம் அதிரடி
Published on

மியான்மர்,

தவறான மற்றும் அநாகரிகமான பதிவுகளுக்காக மியான்மர் நாட்டின் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை, பேஸ்புக் நிர்வாகம் தடை செய்துள்ளது

இது தொடர்பாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் "தனிநபர்கள் மற்றும் குறிப்பிட்ட அமைப்புகளை சார்ந்த பலர் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2017ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் பிரச்சினை, ஐநாசபை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மியான்மர் நாட்டின் ராணுவ தளபதி, ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் பேஸ்புக்கில் பதிவு செய்தார் என, அவரது பேஸ்புக் கணக்கை அதிரடியாக நீக்கியுள்ளது பேஸ்புக் நிர்வாகம். இதில் மியான்மர் நாட்டின் துணை ராணுவ தளபதி, விமானப்படை தளபதி மற்றும் மியான்மர் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளின் பேஸ்புக் பக்கங்களும் அடங்கும். இது தொடர்பாக கிட்டத்தட்ட 20 பேரின் பேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குச் சொந்தமான 52 பேஸ்புக் பக்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 12 மில்லியன் பாலோவர்களுடன் இருந்த பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் மாநில முக்கிய பிரமுகர்களின் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளது இதுவே முதல் முறை என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com