

சென்னை,
இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கின. இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். திடீர் கோளாறு குறித்து பல லட்சம் பயனர்கள் புகார் செய்துள்ளனர்.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்தே மிக அதிகளவிலான புகார்கள் பதிவாகியது. சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை. கோளாறை சரி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.