

வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது 3வது திருமணத்தின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
தனது நீண்ட கால நண்பரான சாம் அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணம் செய்துகொண்டார். இது, அவரது மூன்றாவது திருமணமாக அமைந்த நிலையில், திருமண நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.