அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்: உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்: உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
Published on

வாஷிங்டன் டிசி,

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com