பிரான்ஸ் குடியுரிமையை பெற்ற இங்கிலாந்து பிரதமரின் தந்தை

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார்.
பிரான்ஸ் குடியுரிமையை பெற்ற இங்கிலாந்து பிரதமரின் தந்தை
Published on

பாரீஸ்,

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வருகிறார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (வயது 81). ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஸ்டான்லி கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிரெஞ்சு குடியுரிமை கோரி விண்ணப்பித்து உள்ளார்.

இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டது. பிரான்ஸ் நீதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை பெற்ற பின்னர் ஸ்டான்லி கூறும்போது, நான் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த பின் இங்கிலாந்து பிரதமரான உங்களது மகன் போரிஸ் ஜான்சனின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதற்கு பதிலளித்த ஸ்டான்லி, ஒரே வார்த்தையில் போரிஸ், அற்புதம் என்றார் என கூறியுள்ளார்.

அரசியல்ரீதியாக ஸ்டான்லி மற்றும் போரிஸ் இருவரும் எதிரெதிர் முனைகளில் நின்றனர். பிரெக்சிட்டில் இருந்து இங்கிலாந்து வெளியேற போரிஸ் தீவிரம் காட்டிய நிலையில், தொடர்ந்து பிரெக்சிட்டில் நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவரது தந்தை வாக்களித்தது கவனிக்கத்தக்கது.

பிரெக்சிட்டில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒரு தொடர்பில் இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதனாலேயே பிரெஞ்சு குடியுரிமையை பெற்றேன் என ஸ்டான்லி கூறியுள்ளார்.

உண்மையில், ஸ்டான்லியின் தாயார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். அவர் வெர்சைல்ஸ் நகரில் பிறந்தவர். அதன் அடிப்படையிலும் உணர்வுரீதியாக பிரெஞ்சு குடியுரிமையை பெற்றேன் என ஸ்டான்லி ஒப்பு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com